Categories
அரசியல்

ஏப்ரல்-4 முதல் புதிய விதிமுறை அமல்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!

எஸ்பிஐ வங்கியையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவதற்கான விதிகளை மாற்றியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில். பாசிட்டிவ் பேமண்ட் முறையை (PPS) முறையை அமல்படுத்தப்படுகிறது. பல்வேறு வங்கிகள் ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருந்தாலும் ஏப்ரல் நான்காம் தேதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறையானது  காசோலை மூலமாக பணம் செலுத்துவதற்கான சரிபார்ப்பு தொடர்புடையது. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒரு காசோலையை வழங்கினால் வாடிக்கையாளரின் உறுதிப்படுத்துதல் அவசியம். மேலும் கணக்கு எண், காசோலையின் தேதி, காசோலை தொகை மற்றும் வாடிக்கையாளரின் பெயர் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் காசோலை திரும்ப பெறப்படும்.

Categories

Tech |