பிரிட்டனில் திருமண நிகழ்ச்சியில் 15 விருந்தினர்கள் வரை கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் ஏப்ரல் 12 முதல் திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்தினர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்ட 15 நபர்களை அனுமதிக்கலாம். மேலும் அதனை தொடர்ந்து நடக்கக்கூடிய வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் அனுமதிக்கப்பட உள்ளது .ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஏப்ரல் 12 முதல் 15 பேர் வரை திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளை தேவாலயங்கள் போன்ற சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மே 17 வரை ஹோட்டல் போன்ற பிற பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வெளியான தகவலில் 15 பேர் வரை திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டு ஹோட்டல்களில் வைத்து நிகழ்ச்சிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 12 க்கு முன்பு வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.