Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்…. பழைய ஓய்வூதியத் திட்டம்….. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மாநில அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்திற்கு பணமெடுப்பது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து கைவிடப்படுவதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு பணம் பிடித்தம் செய்யாமல் கூடுதல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இதன்படி ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு மாதம் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் 2004ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள ஊழியர்களில் 2016 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 2441 ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை 1,718 ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 716 ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |