ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர் உர்சுலா வொன்டர் லெயன் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை வாங்குவதற்க்காக ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி 90 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்க இருப்பதாக கூறிய அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் 30% தடுப்பூசிகளை மட்டுமே அந்நாட்டிற்கு டெலிவரி செய்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அந்நிறுவனத்திடம் கேட்டபோது தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் தங்களால் கொடுத்த வாக்கை காப்பாத்த முடியவில்லை என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் கோபமடைந்த உர்சுலா வொன்டர் லெயன் “பிரிட்டனுக்கு மட்டும் சரியான நேரத்தில், சரியான அளவு தடுப்பூசிகளை தங்களால் எவ்வாறு டெலிவரி செய்ய முடிந்தது? முதலில் எங்களுக்கு தரவேண்டிய தடுப்பூசிகளை அனுப்பி வைத்துவிட்டு மற்ற நாடுகளுக்கு கொடுங்கள் இல்லையென்றால் பிரிட்டன், ஸ்வீடன் போன்ற நாடுகளுக்கு தங்கள் நிறுவனம் அனுப்பிய தடுப்பூசிகள் ஐரோப்பியாவின் உறுப்பு நாடுகள் வழியாக வரும்போது அதனை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடுவோம்” என்று அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்