பெண் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் முக கவசம், மற்றும் ஹெல்மெட் அணியாமல் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் சிவகிரி வடக்கு ரத வீதியில் வசிக்கும் ரத்தினகுமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் மது போதையில் பெண் போலீசாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரத்தினகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.