நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கான்சாபுரம் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பி பட்டி, கூமாபட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததை கண்டித்து இந்த போராட்டமானது நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.