Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் என்னை ஏமாத்தின… முன்னாள் காதலனின் வெறிச்செயல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பெண்ணின் மீது அசிட் வீசிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் லேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு பார்த்திபன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரை கைவிட்டு விட்டு தற்போது தீனதயாளன் என்பவரையும்  காதலித்தார். ஆனால் லேகா இவரையும் கைவிட்டுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த லேகாவின் முன்னாள் காதலனான பார்த்திபன் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து லேகாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த லேகாவின் முகத்தில் அசிட் ஊற்றியுள்ளார். இதில் படுகாயமடைந்த லேகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீனதயாளன், ஐஸ்வர்யா ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |