இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணி புரிந்துவரும் தன் ஆர்வலர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை களையும் நடவடிக்கையாக கடந்து 2020 ஒரு அக்டோபர் மாதம் முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வீடு தேடி சென்று கல்வியை வழங்கி வருகின்றனர்.
குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 11,000 பேர் தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்க்கு 4 மாத ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஒருவரிடம் அவர் கூறியபோது, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறோம். ஆனால் அரசு வழங்கும் ஊக்கத்தொகையை கடந்து சேவை நோக்கில் தான் இந்த பணியை செய்து வருகின்றோம்.
இருந்தாலும் அரசு தங்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த ஊக்கத் தொகையாக 1,000 கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. தற்போது விடுமுறை காலம் என்ற காரணத்தினால் இந்த விவகாரம் பற்றி அதிகாரிகளும் பேச மறுத்து வருகின்றனர். ஒரு சில தன்னார்வலர்களுக்கு நான்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படாமல் இருக்கின்றது. இதனால் பலர் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றன. அதனால் அரசு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தை அரசியல் கட்சியினர் கையில் எடுத்திருக்கின்றன. இதுபற்றி பாமக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றார். அதில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் கற்பித்தல் தன்னார்வலர்கள் ஆக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த நான்கு மாதங்களாக ரூபாய் 1,000 மாது ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. இந்த குற்றசாட்டை இல்லம் தேடி கல்வி அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை மாதம் ரூபாய் 1000 ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப்படுகின்றது. வேலை செய்யாத பல பேருக்கு அதுதான் வாழ்வாதாரமாக இருக்கின்றது. அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல எனவும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் செய்வது சேவையாகும். இந்த நிலையில் அவர்களில் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத் தொகை வழங்காமல் இருப்பதே நியாயப்படுத்த முடியாது. அவர்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.