தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போனை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெசிகா வசித்து வந்தார். இவர் திடீரென கடந்த வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் பவுலின் ஜெனிக்காவின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்டு பேசியது சினிமா தயாரிப்பாளரான சிராஜூதீன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்தது.
ஆனால் அந்த செல்போனை காணவில்லை என பவுலின் ஜெசிக்காவின் அண்ணன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன் என்பவர் தான் பவுலின் ஜெசிகா வீட்டிற்கு வந்தார் என்பது, செல்போனை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அதன் பின்னர் காவல்துறையினர் அவரிடம் இருந்து செல்போனை மீட்டுள்ளனர். ஆனால் பவுலின் ஜெசிகா தற்கொலை செய்வதற்கு முன்பதாக பேசிய ஆடியோ மற்றும் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய அந்த செல்போனை காவல்துறையினர் தடவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிராஜூதீன் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை என பவுலின் ஜெசிகாவின் உறவினர்கள் கூறினர். அதற்கு அவர் காரைக்குடியில் நடக்கும் படப்பிடிப்பில் இருப்பதாகவும், ஒரு வார காலத்திற்குள் படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்த பிறகு விசாரணைக்கு ஆஜராகுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சிராஜூதீன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.