Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன் அப்படி செய்தீர்கள்…..? சிறப்பாக ஆடாதது எதற்காக…..? விராட்டை வெளுத்து வாங்கிய கௌதம் கம்பீர்‌….!!!!

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த மேட்சில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் ஹர்த்திக் பாண்டியா மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து 1000 நாட்களை கடந்து விட்டது. இதனால் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வர வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

ஆனால் விராட் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் திணறி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேட்ச்சில் விளையாடிய விராட் கோலியை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கடுமையாக சாடியுள்ளார். இவர் கோலி குறித்து கூறியதாவது, விராட் சர்வதேச கிரிக்கெட்டில் எப்படி விளையாடுவார் என்பது எனக்கு தெரியும். ரோகித்தின் விக்கெட் சரிந்த போது விராட் அப்படி ஒரு சாட்டை அடித்தது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். இந்த மாதிரி ஒரு சாட்டை ஒரு இளம்வீரர் அடித்திருந்தால் நிறைய பேர் விமர்சனம் செய்திருப்பார்கள்.

ஆனால் இளம்வீரர் அந்த சாட்டை அடிக்காமல் இருந்ததே மிகவும் நல்லது. விராட் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உங்கள் கேப்டன் இப்போது தான் ஆட்டத்தை இழந்தார். உங்களுடைய இன்னிங்ஸை நீங்கள் சிறப்பான முறையில் கட்டமைத்து விளையாடி இருந்தால் முடிவு எளிதாக மாறி இருக்கும். ஒருவேளை சிக்ஸர் அடிக்கும் முயற்சி செய்து ஆட்டம் இழந்திருந்தால் கூட பரவாயில்லை. அதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஏனெனில் ஒரு பெரிய சாட்டை அடிக்கும் போது கண்டிப்பாக சிக்ஸர் அடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் சிக்சர் அடிப்பதற்கும் முயற்சி செய்யவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |