Categories
உலக செய்திகள்

ஏன் அனைத்து நாடுகளும் நிரந்தர கவுன்சிலில் உறுப்பினர்களாக இல்லை?…. நடைபெற்ற ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய உக்ரைன் அதிபர் ….!!!!

நடைபெற்ற ஐ.நா.வின் 77- வது பொது சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர்  காணொளி மூலம் உரையாற்றியுள்ளார்.

அமெரிக்காவில் ஐ.நா.வின் 77-வது பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் உக்ரைன் நாட்டின் நிலைமை சரியில்லாததால் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார். இவர் பேசிய காணொளி நேற்று முன்தினம் ஒளிபரப்பப்பட்டது. அப்போது இந்தியா, ஜப்பான் தனது சொந்த நாடான உக்ரைன்  மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ஏன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இல்லை என்ற கேள்வியை  அவர் எழுப்பினார்.

மேலும் இந்த இந்த பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும்.  ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் செய்வது பற்றி பல முறை பேசி விட்டேன். அதிபர் அவையில் முடிவுகளை எடுக்கப்படாமல் முடித்து விட்டதாகவும் விமர்சனம் செய்தார்.  தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளது. இந்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் அந்த காணொளியில் கூறியுள்ளார்.

Categories

Tech |