இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மோசடிகளை தவிர்ப்பதற்காக ஏடிஎம்மில் பணம் எடுக்க OTP முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.எஸ்பிஐ வாடிக்கையாளர் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அவரது மொபைலுக்கு OTP பாஸ்வோர்ட் வரும். அந்த OTP பாஸ்வோர்டை பதிவிட்ட பிறகே வாடிக்கையாளரால் பணம் எடுக்க முடியும். இதன் மூலம் பணத்தை வாடிக்கையாளர்தான் எடுக்கிறார் என்பதையும், மோசடிக்காரர்களின் தலையீடு இல்லை என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.
OTP என்பது 4 இலக்க எண் ஆகும். எனினும், 10000 ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுக்கும்போது மட்டுமே OTP முறையில் பணத்தை எடுக்க வேண்டும். அதற்கு குறைவான தொகை எடுக்கும்போது OTP முறை தேவை இல்லை. வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், OTP முறையில் பணம் எடுப்பது பாதுகாப்பானது என்கின்றனர் நிபுணர்கள்