பெண்ணிடம் ஏடிஎம் கார்டை திருடி 44,000 அபேஸ் செய்த மர்மநபரை போலீஸ் தேடி வருகின்றார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள அல்லிநகரம் மண்டு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சந்திரா என்பவர் தனது வீட்டில் வங்கி கணக்கின் ஏடிஎம் கார்டை வைத்திருக்கின்றார். அதனை மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார்கள். அந்த ஏடிஎம் கார்டுடன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
அந்த கார்டை பயன்படுத்தி சந்திராவின் வங்கி கணக்கிலிருந்து 44 ஆயிரத்தை அந்த மர்ம நபர் அபேஸ் செய்துள்ளார். சந்திரா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.