பஞ்சாப் நேஷனல் வங்கி, தங்களது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.
முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கி. இது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை தொடங்கியுள்ளது. அதன்படி இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இனி சுலபமாக பணம் எடுக்க முடியும். அந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாகவும், எளிதாகவும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தாமல் பணம் எடுக்க முடியும். இது தவிர விருச்சுவல், டெபிட் கார்டு போன்றவற்றை இந்த வங்கி அறிமுகம் செய்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்கு என்ற ’PNB One’ மொபைல் செயலியில் புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி மிகவும் எளிதாகவும், இந்த வசதியின் கீழ் வாடிக்கையாளர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறாரோ அந்த வங்கியின் ஏடிஎம்மிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். பல்வேறு வங்கிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த வசதி வந்த பிறகு ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கும் போது ஸ்கிரீன் கார்டு, குளோனிங் அல்லது ஸ்டாம்பிங் போன்ற மோசடிகளை தடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.