வங்கிகளில் நடைபெறும் நிதி மோசடியை தவிர்ப்பதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கிகளின் நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ATM மையங்களில் பணம் திருடப்படுகிறது. ஏடிஎம் பின் நம்பரை திருடி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தவும் ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான ஏடிஎம் வித்டிராவலில் புதிய விதிமுறை அமலுக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுக்கும்போது ஓடிபி நம்பரைப் பதிவிட வேண்டும். இந்த நம்பர் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாது. ஏடிஎம்மில் பணம் கொடுக்கும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும்ஓடிபி பதிவிட வேண்டி இருக்கும். இந்த விதிமுறை அனைத்து வாடிக்கையாளர்களுக்கம் பொருந்தாது குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே போட்டிக்கு முறை கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது பத்தாயிரத்திற்கும் அதிகமான தொகையை எடுக்கும் போது மட்டுமே ஓடிபி அனுப்பப்படும்.
அதைவிட குறைவாக எடுத்தால் ஓடிபி கிடையாது. வழக்கமான முறையில் எடுத்துக் கொள்ளலாம். வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு இந்த ஓடிபி அனுப்பப்படும். அதனால் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை ஆக்டிவ் ஆக வைத்திருப்பது மிகவும் அவசியம் என்று வங்கிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிதிமோசடியை தடுப்பதற்காகவே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.