Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

ஏசி ரூம்ல இருந்த அவருக்கு…. மக்களோட கஷ்டம் எப்படி தெரியும்…. முதல்வர் விமர்சனம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் தாராளமாக அதிமுக அரசு நிதி வழங்கி வருகிறது. ஏ.சி.அறையிலேயே இருந்த மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் கஷ்டம் எதுவும் தெரியாது என்று விமர்சனம் செய்துள்ளார்.

 

Categories

Tech |