Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ஏகே-61 அஜித்தின் கெட்டப்… வெளியான புகைப்படம்…!!!

அஜித்குமார், ஏகே 61 படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டு வருடங்களாக திரைப்படங்கள் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் வலிமை திறப்பதற்காக காத்திருந்தனர். இந்நிலையில் இத்திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகியது. இதனை ரசிகர்கள் திருவிழா போல் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஹீமா குரேஷி.

இந்நிலையில் அஜீத் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வெளியானது. புகைப்படத்தில் அஜித் பிளாக் அண்டு ஒயிட் கோட்டுடன் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் கடுக்கன் அணிந்தவாறு போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்தவர்கள் ஏகே61 திரைப்படத்தின் கெட்டப் இதுதான் என கூறுகிறார்கள். ஏகே 61 வலிமை படத்தின் கூட்டணியான அஜித்,வினோத், போனி கபூர் தொடர்கின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |