Categories
அரசியல் திண்டுக்கல்

எஸ்.வி.சேகர் கூறும் கருத்துக்கு பதில் சொல்ல முடியாது – முதல்வர் …!!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று அக்கட்சியின் இரு ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தம்மை பற்றி எஸ்.வி.சேகர் கூறும் கருத்துகளுக்கெல்லாம், பதில்   சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். இருமொழிக் கொள்கை முடிவில் தமிழக அரசு திடமாக உள்ளதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். இ_பாஸ் வழங்கும் நடவடிக்கையை தமிழக அரசு துரிதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை அரசு வேகப்படுத்தி உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |