Categories
மாநில செய்திகள்

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு..!!

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

Categories

Tech |