முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி எதிரான வழக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கோவை மாநகராட்சி டெண்டரை ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கு தொடர்ந்தபோது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதனடிப்படையில் முதலில் விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை புகாரில் முகாந்திரம் இல்லை என்று தெரிவித்தது.
அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பான முகாந்திரம் இல்லை என்று எனக்கு வழங்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு எடுத்துவிட்டதால் தன் மீதான வழக்கு விசாரணைக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேலுமணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், ஒரு முறை லஞ்ச ஒழிப்பு துறை முகாந்திரம் இல்லை என்று முடிவெடுத்த பிறகு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது தமிழக அரசு தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை இந்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அதையடுத்து எஸ் பி வேலுமணியின் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீது தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை, அறப்போர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.