இயக்குனரும் பிரபல நடிகருமான எஸ்.ஜே சூர்யா விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாலி படத்தின் மூலமாக 1999 ஆம் வருடம் இயக்குனராக அறிமுகமான இவர் நியூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் அடி எடுத்து வைத்தார். வாலி, குஷி போன்ற வெற்றி படங்களை இறக்கிய இவர் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்கலில் நாயகனாகவும் நடித்தார். இவருக்கு ஏராளமான வில்லன் பட வாய்ப்புகள் குவிந்தன.
இதற்கிடையில் எஸ்.ஜே சூர்யா நடிகை ஒருவரை காதலிப்பதாக அவ்வப்போது வதந்திகள் வந்தாலும் அதனை அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்நிலையில் 54 வயதாகும் இவருக்கு அவருடைய குடும்பத்தார் பெண் பார்த்து வருகிறார்கள். எனினும் மணப்பெண் யார் என்று குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இது குறித்து அதிகார அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் என்று பார்த்துள்ளனர்.