எஸ்பி-யை தள்ளிவிட்ட பாஜக துணைத் தலைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
நேற்று முன்தினம் திருத்தணியில் பாஜகவின் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரைக்கு தடையை மீறி பாஜகவினர் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். இந்நிலையில் மண்டபத்தில் மின்சார வசதி இல்லை என பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் சென்றுள்ளார். அச்சமயம் பாஜகவை சேர்ந்த நபரொருவர் எஸ்பி அராவிந்தனை கீழே தள்ளி விட்டுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு பாஜகவின் துணை தலைவரான ஓம்சக்தி செல்வமணியை கைது செய்தனர். அதன் பின் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.