Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எஸ்பிபியின் இறுதி சடங்கு…. கட்டுக்கடங்காத கூட்டத்தில்…. அரங்கேறிய சம்பவம்…. அதிர்ச்சியிலும் அதிர்ச்சி…..!!

எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் செய்தியாளர்கள் உட்பட 5 பேரிடம் செல்போன் திருடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் அமையப்பெற்றிருக்கும் எஸ்பிபியின் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறையினரும் குவிந்திருந்தனர்.

அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் கைப்பேசி உட்பட 5 பேரின் கைப்பேசிகளை கூட்டத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடி உள்ளனர். பிரபல பாடகர் உயிரிழந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் உட்பட அங்கு இருந்தவர்களிடம் திருட்டு வேலையை காட்டியது யார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

Categories

Tech |