இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவருக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி இனி இஎம்ஐ பரிவர்த்தனைகள் மற்றும் வாடகை செலுத்துவதற்கான கட்டடம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டட உயர்வு நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு பிராசசிங் கட்டணமாக இதுவரை 99 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டணத்தை EMIயாக மாற்றும்போது அதற்கு பிராசசிங் கட்டணம் வசூலிக்கப்படும்.
இனி இஎம்ஐ பிராசசிங் கட்டணமாக 199 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்தினால் பிராசசிங் கட்டணமாக 95 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.