Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி EMI அதிகம் கட்டணும்…. எவ்வளவு தெரியுமா….????

இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. தற்போது எஸ்பிஐ வங்கி பென்ச் மார்க் பிரைம் லேண்டிங் ரேட்டை 70 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 13.45 சதவீதமாக உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.இந்த புதிய வட்டி உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெஞ்ச் மார்க் பிரேம் லேண்டிங் உயர்வு என்றால், சமீபத்திய புதுப்பித்தலுடன் தற்போதைய பிபி எல் ஆர் விகிதம் 12.75 சதவீதமாக இருக்கின்றது.

அதன் மூலம் அடிப்படை விகிதத்தில் கடன் வாங்கிய பயனாளிகளுக்கு இஎம்ஐ தொகை உயரக்கூடும். பெரும்பாலான வங்கிகள் வெளிப்புற பெஞ்சு மார்க் அடிப்படையில் ஆன கடன் விகிதம் அல்லது ரெப்போ அடிப்படையில் கடன்களை வழங்கி வருகின்றன.தற்போது எஸ் பி ஐ வங்கியின் கடன் வட்டி விகித திருத்தத்தை தொடர்ந்து இனிவரும் நாட்களில் மற்ற வங்கிகளும் இதனை பின்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் பி ஐ வங்கியின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்களின் இஎம்ஐ கட்டணங்கள் இனி உயரக்கூடும்..

Categories

Tech |