நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்களுக்கு 4.50 சதவீதம் வட்டி, 180 முதல் 210 நாட்களுக்கு 5.25% வட்டி, 211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை 5.75 சதவீதம் வட்டி மற்றும் 1 முதல் 3 ஆண்டுகள் வரை 6.75 சதவீதம் வட்டி, நீண்ட கால திட்டங்களில் மூன்று முதல் பத்து வருடங்களுக்குள் 6.25% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு அரை சதவீதம் கூடுதல் வட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.