Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. மிகப்பெரிய சலுகை அறிவிப்பு….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி  வீட்டுக் கடன் தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடனில் எஸ்பிஐ பருவமழைகால அதிரடி சலுகையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கடன் வாங்குபவர்கள், அந்த கடனுக்கு எந்தவித செயலாக்க கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதாவது, வீட்டுக் கடன் வாங்குவோர் இந்த நடவடிக்கையால் அதிக நிவாரணங்களைப் பெற முடியும்.

எஸ்பிஐ-யின்  இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி, தற்போது, ​​செயலாக்க கட்டணம், கடன் தொகையில் 0.35 சதவிகிதம் மற்றும் வீட்டுக்கடன் தொகையில் சேவை வரி ஆகியவை விதிக்கப்படுகின்றன. ஆவண செயலாக்க நடவடிக்கைகளின் போது வாடிக்கையாளரிடமிருந்து செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வங்கி அளித்த தகவலின் படி, செயலாக்க கட்டண தள்ளுபடி திட்டம் ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும். வங்கியின் நிர்வாக இயக்குனர் சிஎஸ் ஷெட்டி கூறுகையில், வங்கியின் செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வது வீட்டுக் கடன் வாங்குவோர் மத்தியில் உற்சாகத்தை அதிகரிக்கும் என்றார்.

Categories

Tech |