Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி கணக்கிலும்…. போஸ்ட் ஆபீஸ் திட்டம் தொடங்கலாம்…. எப்படி தெரியுமா…???

அஞ்சலக சேமிப்பு திட்டங்களை எஸ்பிஐ வங்கி கணக்கிலும் எளிதில் தொடங்க வழிமுறைகளை கொடுத்துள்ளது.

அஞ்சலக திட்டங்களில் பொது வருங்கால வைப்பு திட்டம் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி திட்டம் உள்ளிட்ட மிகச் சிறந்த திட்டங்கள் உள்ளது. இதில் 7.1 சதவீதம் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாகவும் மற்றும் 7.63 சதவீதம் சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி வீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டங்கள் தொடக்கத்தில் அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அனைத்து மக்களும் எளிதில் இந்த திட்டங்களில் இணைவதற்காக வங்கி கணக்குகளிலும் தொடங்க அனுமதித்துள்ளது. அரசின் கீழ் செயல்படும் அஞ்சலகத்தில் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்று சுகன்யா சம்ரிதி யோஜனா சுகன்யா சம்ரிதி யோஜனா. இத்திட்டத்தில் இணைய மேற்கொள்ளும் வழிமுறைகள்,

  • https://www.onlinesbi.com/ என்ற இணைய பக்கத்திற்கு சென்று லாகின் செய்து கொள்ளுங்கள்.
  • அதில் Request என்ற ஆப்சனில் சென்று SSY என்ற ஆப்சனிற்கு செல்லவும்.
  • விண்ணபத்தை பதிவு செய்த பிறகு, சரியான ஆவணங்களுடன் இணைத்து போட்டோவும் சேர்த்து கொடுக்கவும்.
  • இதற்காக குறைந்தபட்சம் 1,000 ரூபாயினை டெபாசிட்டினை செய்யவும்.
  •  நீங்கள் கணக்கினை தொடங்கிய பிறகு நீங்கள் செய்யவிருக்கும் டெபாசிட்டினை செக் ஆகவோ அல்லது கேஸ் அல்லது டிடி- ஆகவோ கொடுக்கலாம்.

இந்த கணக்கை தொடங்கிய பின் உங்கள் மொபைல் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். மேலும் எஸ்பிஐ வங்கி இணையதள பயன்பாட்டிற்கான லாகின் வைத்திருக்க, உங்களது கையொப்பம் வேண்டும். இதனைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருப்பின் உடனடியாக உங்களது கணக்கைத் தொடங்கிக் கொள்ள முடியும். இத்திட்டத்தை எங்கு வேண்டுமானாலும் எளிதில் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |