Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்?…. இணையத்தில் வெளியான செய்தி…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கார்டில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 173 ரூபாய் செலுத்த வேண்டும் என்று இணையத்தில் தீயாய் தகவல் பரவி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியில், சேமிப்பு கணக்கில் ஒரு வருடத்தில் 40 க்கும்மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடந்தால் ஒரு பரிவர்த்தனை காண வைப்புத் தொகையிலிருந்து 57.5 ரூபாய் கழிக்கப்படும் என்றும், ஏடிஎம் மையத்தில் பணத்தை எடுப்பதற்கு மொத்தம் 173 ரூபாய் கழிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் தவறானது என PIB Fact check மூலம் தெரிய வந்துள்ளது.அதன்படி பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் எஸ்பிஐ வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |