Categories
தேசிய செய்திகள்

எஸ்கேப் ஆனாலும் விட மாட்டேன்…!! மணப்பெண்ணுக்கு டிமிக்கி கொடுத்த நபர்…. பின் நடந்த தரமான சம்பவம்….!!!!!

பீகாரின் மஹுலி கிராமத்த்தில் வசித்து வரும் பெண்ணுக்கும், மெஹ்கர் கிராமத்தில் வசித்து வரும் ஒரு நபருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே நடைபெற இருந்த திருமணத்தை அந்த மண மகன் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். மேலும் பெண் வீட்டார் அந்த மணமகனுக்கு 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஒரு பைக்கை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பெற்றுக்கொண்ட பின் நிச்சயிக்கப்பட்டபடி மருமகன் திருமணம் செய்துக்கொள்ளாமல் பல காரணம் சொல்லி தப்பித்து வந்திருக்கிறார். இந்நிலையில் தன் பெற்றோருடன் மார்க்கெட்டிற்கு சென்ற அந்த மணமகள் சந்தையில் அந்நபரை பார்த்ததும் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார். அப்போது அந்த நபரோ அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். பின் அவரை விரட்டியடி அந்த பெண்ணும் பின்னால் ஓடியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து உள்ளூர் வாசிகளின் உதவியுடன் ஒரு வழியாக அந்நபரை பிடித்த அந்த பெண் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். எனினும் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்றே அந்நபர் முயற்சி செய்துள்ளார். அப்போது தான் அந்த நபர் வேண்டுமென்றே திருமணத்தை ஒத்திப்போட்டது அம்பலமாகி இருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர்.

Categories

Tech |