Categories
உலக செய்திகள்

எவ்வித தாக்குதல்களுக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்…. சுதந்திர தின விழாவில் உக்ரைன் அதிபர் உறுதி….!!!!

ரஷ்யாவை எதிர்த்து நாங்கள் இறுதிவரை போராடுவோம் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்தப் போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நேற்று 33-வது சுதந்திர தின விழாவை கொண்டாடியது. இந்த சுதந்திர தின விழாவின் போது உக்ரைனின் மத்திய பகுதியில் ரஷ்யா பயங்கர ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததோடு, 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சுதந்திர தின விழாவின் போது ரஷ்யா பயங்கரமான தாக்குதல்களை நடத்தலாம் என ஏற்கனவே உக்ரைன் அதிபர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனையடுத்து சுதந்திர தின விழாவின் போது அதிபர் ஜெலென்ஸ்கி நாட்டு மக்களிடம் கூறியதாவது, ரஷ்யா தன்னுடைய தாக்குதல்களை தீவிர படுத்தலாம். ஆனால் எவ்வித ராணுவ தாக்குதல்களை நடத்தினாலும் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் தீவிரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிக்க மாட்டோம். உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து இறுதி வரை போராடும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |