மனைவி கள்ளக்காதலை கைவிடாததால் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூங்காவனபுரத்தை சேர்ந்த மணிமாறனின் மனைவி மைதிலி. இவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த புதன்கிழமை மைதிலி உறவினர் வீட்டிற்கு சென்று பின்னர் மாயமாகிவிட்டார். அவரை எங்கு தெரியும் கிடைக்காததால் மணிமாறன் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மணலி புதிய மேம்பாலம் அருகில் மைதிலி இறந்து கிடந்தார்.
அவரைக் கொன்று உடலை அங்கு வீசியது தெரிய வந்தது. விசாரணையில் மைதிலிக்கு, ஜெய்சங்கர் என்பவரிடம் பழக்கம் இருந்து வந்ததும், ஜெய்சங்கரை பிடித்து விசாரித்ததில் கடந்த புதன்கிழமை அன்று தன்னுடைய பைக்கில் மைதிலி வந்தார் என்று கூறினார். எல்லையம்மன் கோவில் அருகே மணிமாறன் எங்களை பார்த்துவிட்டார். மேலும் எங்களிடம் சண்டை போட்டார். என் பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு மைதிலியை கோபமாக அழைத்து சென்றார் என அவர் போலீசில் கூறினார்.
பின்னர் மணிமாறன் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் மைதிலி ஜெய்சங்கரின் கள்ளத்தொடர்பை விட மறுத்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால் ஆத்திரத்தில் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். பின்னர் அங்கேயே உடலை போட்டுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடினேன் என்று தெரிவித்தார். இதை அடுத்து அவரை போலிசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.