Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முககவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான பெரியகடைவீதி, அஞ்சலக வீதி, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க், சிறு வணிக நிறுவனங்கள், கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு ரூ.200 வீதம் தல 60 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கும் ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் முதல்நிலை ஏட்டு சுப்பையா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, கண்டவராயன்பட்டி ஊராட்சி செயலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Categories

Tech |