Categories
உலக செய்திகள்

எவர் கிவன் கப்பல் கால்வாயில் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட செலவு …எவ்வளவு தெரியுமா ?வெளியான முக்கிய தகவல் .!!

எவர் கிவன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதால்  மொத்தமாக  1 பில்லியன் வரை செலவாகும் என்று எகிப்து அரசின்  சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது.

மார்ச் 23ஆம் தேதி எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. தற்போது  கிரேட் பிட்டர் ஏரியில் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் நிர்வாக தலைவரான ஒசாமா ரபியா இது குறித்து  விசாரணைகள் முடியும் வரை கப்பல் அங்கேயே தான் இருக்கும் என்று கூறியுள்ளார் .

மேலும் கப்பல் சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டதிலிருந்து அதனை மீட்க செலவழித்த மொத்த செலவும் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அல்லது அதற்கு நிகர வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |