நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலை கடும் உயர்வு அடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களான காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே நோட்டு புத்தகங்கள் விலை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தற்போது ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை 25 முதல் 30 சதவீதமும், பென்சில் விலை 18 முதல் 25 சதவீதம் ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. பேனா, பென்சில் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இந்த விலை உயர்வு அதிகரித்துள்ளது.