தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்திரா மற்றும் லிங்கா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 18 வருடங்களாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் திடீரென விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். இருப்பினும் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் எப்படியாவது சேர்ந்து விடுவார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். மேலும் விவாகரத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கின்றனர்.
https://www.instagram.com/aishwaryarajini/?utm_source=ig_embed&ig_rid=009845f8-a239-4617-ae1d-11ba750b5a5b&ig_mid=84358720-3A96-4FFF-B8B5-2D6C66B5EDC1
இந்நிலையில் ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் அடிக்கடி சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்பைரல் போடப்பட்ட சில புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த சில பதிப்பை பார்க்கும் போது அதிலிருந்து ஒரு பேப்பரை கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை படிக்கும் போது ஏதாவது புதிதாக தோன்றலாம். அதனை அப்டேட் செய்யவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.