Categories
சினிமா

எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள்…. பாரதிகண்ணம்மா கிளைமேக்ஸ் இதுதான்…. வெளியானது ப்ரோமோ வீடியோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள். குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் சீரியல் எப்போது முடிவடையும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வெண்பாவின் திருமண நிகழ்ச்சியில் பாரதி மாட்டிக் கொள்வாரா என எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் இப்போது ரோகித் உண்மையை கூறி வெண்பாவை திருமணம் செய்து கொண்டார். மற்றொரு பக்கம் பாரதி தனக்கும், லட்சுமி மற்றும் ஏமா மூன்று பேருக்கும் டிஎன்ஏ சோதனை எடுத்துள்ள நிலையில் தற்போது அதன் ரிசல்ட் வெளியாகி உள்ளது. அதில் மூன்று பேருக்கும் டி என் ஏ ஒரே மாதிரியாக வந்துள்ளது. இதனால் தனது தவறுகளை உணர்ந்து பாரதி கதறி அழுத நிலையில் பின்னணியில் சோகமான பாடலும் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவடைய உள்ளது உறுதியாகி உள்ளது.

Categories

Tech |