சீனா மற்றும் பாகிஸ்தானை மிரள செய்யும் விதமாக இந்தியா அதிரடி சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
சில மாதங்களாகவே இந்தியாவும், அதன் ராணுவ வீரர்களும் சந்தித்து வரக்கூடிய பிரச்சனையாக எல்லைப் பிரச்சனை திகழ்ந்து வருகிறது. பல வருடங்களாக பாகிஸ்தானுடன், காஷ்மீர் எல்லையில் பிரித்துக்கொள்ளும் விவகாரம் தொடர்பாக, தொடர்ந்து பல மோதல்களை சந்தித்துள்ளோம். தற்போது புதிய பிரச்சினையாக எல்லை விவகாரத்தில், சீனா தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில்,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லடாக் எல்லையில் நிகழ்ந்த சண்டையால் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாகவும், இது போன்ற எல்லைப் பிரச்சனைகள் நிகழக் கூடாது என்பதற்காகவும் இந்திய ராணுவம் பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில்,
இந்தியாவில் டிஆர்டிஓ(DRDO) அமைப்பு புதிய கலப்பின ஆயுதமான SMART(Supersonic Missile Assisted Release of Torpedo)என்ற ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. இந்த சோதனை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளை கதி கலங்க வைக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.