காதலுக்காக பாஸ்போர்ட் இல்லாமல் காதலி வங்கதேசத்தில் நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க தேசத்தை சேர்ந்த 28 வயதான ஷாஷிக்சேக்கும், வங்கதேச நாட்டைச் சேர்ந்த 22 வயதான பாப்யாகோஸ் என்பவரும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து பாப்யாகோஸ் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு நுழைந்துள்ளார். பின்னர் காதலர்கள் இருவரும் தமிழகம் வந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
அங்கிருந்து சென்னை மீஞ்சூரில் வந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். ஷாஷிக்சேக் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வங்கதேசத்தில் தன் மகளை காணவில்லை என்று பெண்ணின் தந்தை புகார் அளிக்க விசாரணையில் அவர் மீஞ்சூரில் தங்கியிருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் குற்றப் புலனாய்வுத் துறை போலீசார், பத்மாவதி நகருக்கு வந்து பாப்யாகோஸ் கைது செய்தனர். பின்னர் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வங்கதேச பெண்ணை ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்டம் எஸ்பி அரவிந்தன், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.