பாகிஸ்தானுக்கு எதிரான டி20 ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறியுள்ளார்..
இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் பல ஆண்டுகளாக எதிரிகளாகவே இருக்கிறது.. காரணம், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்கு அனுப்பும் நாச வேலையை செய்து கொண்டிருக்கிறது.. சமீப காலமாக எல்லையில் பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.. கடந்த காலங்களில் பாகிஸ்தான் இதுபோன்ற நாசவேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடை பெறாமல் இருக்கிறது..
உலகக் கோப்பை தொடரை மட்டும் ஆடி வருகிறது.. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது.. முதற்கட்டமாக தகுதி சுற்றுப்போட்டிகளும், பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகிறது.. நேற்று வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்தை வென்ற இந்தியா நாளை ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது..
அதனை தொடர்ந்து வருகின்ற 24 ஆம் தேதி பிரதான சுற்றான குரூப் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது இந்தியா.. இதற்கிடையே பல்வேறு தரப்பினரும் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே அளித்த பேட்டியில், எல்லையில் நிகழும் அத்துமீறல்களை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக வரும் 24ஆம் தேதி அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..