இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியாவின் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கின்ற இந்திய ராணுவத்தின் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது.