Categories
தேசிய செய்திகள்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான்… இந்திய வீரர் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் இந்திய ராணுவம் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று இரவு அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி என்ற மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது குறிவைத்து துப்பாக்கி சுடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார். அதனால் அப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |