பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார்.
சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர யாரும் இல்லை. டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வேறு காரின் வருகின்றனர். சென்னை திரும்பியதும் திநகர் கிருஷ்ணபிரியா இல்லம் அருகே உள்ள வீட்டில் தங்குகிறார் வி கே சசிகலா. இதனிடையே சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்படும் என தமிழக போலீஸ் தெரிவித்துள்ள்ளது.
தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி யில் அதிமுக கொடி அகற்ற சசிகலாவுக்கு நோட்டீஸ் தரப்படும். காரில் இருந்து கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவகாசம் வழங்கிய பிறகும் காரிலிருந்து கொடியை அகற்றி விட்டால் அடுத்த வரவேற்பு இடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். முத்துமாரியம்மன் கோவில் அல்லது ஓசூர் பேருந்து நிலையம் அருகில் சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்படும் என தமிழக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.