சூர்யகுமாரை வெளியேற்ற உங்களுக்கு ஒரு பந்து தேவை என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்..
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதேபோல சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதைத்தான் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார் . அதில், , “நாங்கள் விரும்பிய நிலைக்கு வந்துவிட்டோம். அனைவரும் அரையிறுதியில் விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிப்படையாக, ஒரு சிறந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். “பாருங்கள், நாங்கள் நிச்சயமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றார்.. “இந்தியா மிகவும் வலிமையான அணி. இந்திய அணி மிக நீண்ட காலமாகவே நிலையாக உள்ளன. இயற்கையாகவே, அவர்கள் நல்ல திறமையானவர்கள். அவர்களின் வரிசையில் அற்புதமான வீரர்கள் உள்ளனர் என்றார்..
மேலும் அவர் சூர்யகுமார் யாதவை பற்றி பேசுகையில், சூர்யகுமார் யாதவ் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சிறந்த ஸ்டிரைக் ரேட்டில் மூன்று அரை சதங்களைப் பதிவு செய்திருப்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் திறமையான வீரர். அவர் இதுவரை நடந்த போட்டியின் சிறந்த பேட்டராக திகழ்கிறார். அவர் கிரிக்கெட்டில் விளையாடும் சுதந்திரத்தின் அளவு அவரது மிகப்பெரிய பலமாகத் தெரிகிறது.
அவர் அனைத்து விதமான ஷாட்களையும்ஆடுகிறார், அவர் நிறைய ஷாட்களைக் கொண்ட ஒரு பேட்டர். ஆனால் அவர் வெளியேற்றப்படலாம், அதைச் செய்ய அணி தீவிரமாக இருக்கும்.. உலகில் எந்த ஒரு பேட்டரைப் பொறுத்த வரையில், விக்கெட்டை எடுப்பதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே தேவை. சூர்யகுமாரை வெளியேற்ற உங்களுக்கு ஒரு பந்து தேவை, அதற்கான வழியை நாம் தீவிரமாகக் கண்டுபிடிக்க வேண்டும். அதைச் செய்ய நாங்கள் ஆசைப்படுவோம் என்றார்..