தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளை ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆட்சியர் முரளிதரன் அந்த ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ரேஷன் கடை ஆவணங்கள் மற்றும் பொருட்களின் தரம், இருப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்துள்ளார்.
மேலும் கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களிடமும் முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்துள்ளார். அப்போது மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்துள்ளனர்.