Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

எல்லாருக்கும் நன்றி…. உங்களுக்கு கடன் பட்டுள்ளேன்…. அப்பா வீட்டில்…. நான் மருத்துவமனையில் …!!

அமிதாப் பச்சனுக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை அடுத்து வீடு திரும்பிய நிலையில் வீட்டிலேயும் தனிமையில் இருக்கப்போவதாக கூறியுள்ளார். 

இந்தியத் திரையுலகில் ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் ஜூலை 11-ம் தேதி அன்று கொரோனா தொற்று  உறுதியானதைத் அடுத்து மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும்  குணமடைந்து வீடு திரும்பி விட்டார்கள்.

அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மகன் அபிஷேக் பச்சன் இருவருமே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார்கள்.நேற்று அமிதாப்பச்சனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததை தொடர்ந்து அவர் வீடு திரும்பி, தனிமையில் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தல் தெரிவித்துள்ளார். இது குறித்து அமிதாப் பச்சன் கூறியதாவது: “கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பியுள்ளேன். வீட்டுத் தனிமையில் இருக்கிறேன். கடவுளின் கருணையாலும், பாபுஜியின் ஆசியாலும், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரின் பிரார்த்தனைகளாலும் நானாவதி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினாலும் இந்த நாளைப் பார்க்கும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது”. என குறிப்பிட்டிருந்தார்.

கொரோனா பரிசோதனையில் அபிஷேக் பச்சனுக்கு பாசிட்டிவ் என்றே வந்தது. அதனால், அவர் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இது பற்றி அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது: “துரதிர்ஷ்டவசமாக மீண்டும் கொரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால், மருத்துவமனையில் இருக்கிறேன். என்னுடைய குடும்பத்துக்காக உங்களுடைய வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கும் மீண்டும் நன்றி. நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். விரைவில் இதைக் கடந்து ஆரோக்கியமாகத் திரும்பி வருவேன். சமீபத்தில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

தற்போது அவர் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவருக்கான உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. இவ்வாறு அபிஷேக் பச்சன் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |