Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எல்லாம் சரியா இருக்கா?…. ஆய்வுசெய்த மேயர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாநகராட்சி மேயர்  அதிரடியாக வீதிகளில் ஆய்வு செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதனால் தேர்  ரத வீதிகளை சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நேற்று மாநகராட்சி மேயர் சரவணன் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, கழிப்பறை மற்றும் தேர் வரும் ரத விதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் டவுன் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் ஊழியர்களுக்கு போதுமான இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் ஆய்வு செய்துள்ளார். இதில் மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர பொறியாளர் அசோகன், மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |