Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே ரெடியா இருக்கு… எந்த பிரச்சனையும் இல்லை… பேட்டி கொடுத்த கலெக்டர்…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகள் பற்றி கலெக்டர் சிவன் அருள் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வாணியம்பாடி நிருபர்களிடம் கலெக்டர் கூறும்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்று வருகிறது.

மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் வசதிகள், நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 863 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டறம்பள்ளி அருகே 50 படுக்கை வசதிகளுடன் சித்தமருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக 2 ஆயிரம் படுக்கை வசதிகள் மற்றும் 1 1/2 டன் ஆக்சிஜன் பிளானட் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சையாளருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. எனவே தேவையான மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பதாகவும், உயிர்காக்கும் மருந்துகள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை, டாக்டர் தினகரன், நகராட்சி சுகாதார அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் அலி ஆகியோர் கலெக்டருடன் இருந்தனர்.

 

Categories

Tech |