அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தான், கனமழை வந்த போது குறைந்த நேரத்தில் அவற்றை அகற்ற முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தி.நகரில் தண்ணீர் தேங்குவதற்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் காரணம் என்று முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தமிழகத்தில் சரியாக செயல்பட்டது என்று மத்திய அரசே பாராட்டு தெரிவித்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் தொகுதியிலேயே நீர் தேங்கியுள்ளது. அதிமுக மீது குற்றம்சாட்ட வேறு காரணம் கிடைக்காததால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார் முதல்வர். முதல்வர் தொகுதியிலேயே மழைநீர் தேங்கி அதனை இன்னும் வெளியேற்றாமல் தவித்து வருகின்றனர். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வில்லை எனவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.