கடந்த அக்டோபரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையடுத்து செக் குடியரசின் புதிய பிரதமராக பீட்டர் ஃபியாலோ பதவி ஏற்றுள்ளார்.
செக் குடியரசில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதுவரை எதிர்க் கட்சியின் தலைவராக இருந்த பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி 27.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
இதனையடுத்து பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 15.6 சதவீத வாக்குகளைப் பெற்ற மற்றொரு கூட்டணி கட்சியுடன் இணைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலையடுத்து தற்போது செக் குடியரசின் புதிய பிரதமராக பீட்டர் ஃபியாலோ பதவியேற்றுள்ளார்.